Volume 1, Issue 1

கிருஷ்ணகிரி மாவட்ட திருநாள்சந்தைகள் - ஒர் ஆய்வு

Author

முனைவர் ஆ. அன்பழகன் தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, நல்லாம்பட்டி. தருமபுரி

Abstract

புவி இயலார் குறிஞ்சி மற்றும் முல்லை நிலப் பிரதேசங்களாக கிருஷ்ணகிரி மாவட்டப் பகுதிகளைக் குறிப்பர்.  தென்பெண்ணையாற்றைத் தவிர வேறு பெரிய நதிகள் எதுவும் இம்மாவட்டத்தினூடே பாய்ந்து செல்லவில்லை.  எனவே, கால்நடை மேய்ப்பு சார் சமூகமாகவே (Pastrol society) இம்மாவட்ட மக்கள் பன்னெடுங்காலமாக வாழ்ந்து வருகின்றனர்.  கால்நடைகளைக் கொண்டே மக்களது வாழ்க்கைத் தரம் நிர்ணயிக்கப்பட்டது.  இங்கு ஏற்பட்ட அரசுகளும் நிலைத்த அரசுகளாக விளங்கவில்லை.  இடைக்கால இந்திய வரலாற்றில் தென்னிந்தியாவில் தோன்றிய விஜயநகரப் பேரரசு டெல்லி சுல்தான்களின் ஆதிக்கத்தை தென்னகத்தில் தடுத்து நிறுத்தியதோடு மட்டுமின்றித் தமிழகத்தில் கலை, பண்பாடு, கலாச்சாரம் போன்ற பல துறைகளில் பெரும் மாறுதல்களை ஏற்படுத்தியது. விஜய நகர ஆட்சிக்காலத்தில் ஒவ்வொரு கிராமமும் கிராமப் பொருளாதாரத்தின் அலகாகவும், நடைமுறையில் சுய தேவையைப் பூர்த்தி செய்து கொள்வதாகவும் இருந்தது.  கிராமங்கள் விவசாய பொருட்களின் உற்பத்தியில் ஈடுபட்டிருந்ததால் அதனைச் சார்ந்த வாழ்க்கையே நிலவி வந்தது.  விஜயநகர பேரரசைத் தோற்றுவித்தவர்களில் ஒருவரான முதலாம் புக்கனின் மகன் குமாரகம்பண்ணன் காலத்தே கிருஷ்ணகிரி மாவட்டமும் விஜய நகர ஆட்சிக்கு உட்பட்டிருந்தது.  விஜயநகரப் பேரரசின் முளுவாய் ராஜ்ஜியத்தின் நேரடி ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக கிருஷ்ணகிரி மாவட்டம் விளங்கி வந்தது.  கர்நாடக மாநிலத்தில் உள்ள முளுபாகல் முளுவாய் ராஜ்ஜியத்தின் தலைநகரமாகும்..

DOI

PAGES: 7 | VIEWS | DOWNLOADS


Download Full Article

முனைவர் ஆ. அன்பழகன் தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, நல்லாம்பட்டி. தருமபுரி | கிருஷ்ணகிரி மாவட்ட திருநாள்சந்தைகள் - ஒர் ஆய்வு | DOI:

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Certificate Delivery: Digital

Publish your article with ARAN INTERNATIONAL EJOURNAL OF TAMIL RESEARCH (AIJTR)