எஸ்.சிங்கநெஞ்சம் இயக்குனர்(ஓய்வு) இந்திய புவியியல் ஆய்வுத்துறை சென்னை
“இலக்கியம் காலத்தைக் காட்டும் கண்ணாடி”என்பர். தாம் தோன்றிய காலத்தின் விழுமியங்களை மட்டுமல்ல, அவலங்களையும் இலக்கியங்கள் படம் பிடித்துக் காட்டுகின்றன. பஞ்சம், பசி, பட்டினி, பிணி போன்ற அவலங்கள் மணிமேகலையில் சித்தரிக்கப்பட்டுள்ளது போல் வேறு எந்த நூலிலும் விரிக்கப்படவில்லை.. இதற்குக் காரணம் என்ன? இதனால் நாம் அறிவது என்ன?மணிமேகலை காப்பியத்தில் ‘பசி’ எனும் சொல் நாற்பதிற்கும் மேற்பட்ட இடங்களில் ஆளப்பட்டிருக்கிறது என்பது நமக்கு வியப்பை அளிக்கிறது. (http://tamilconcordance.in) காப்பியத்தில் உள்ள முப்பது காதைகளில் 14 காதைகளில் பசி பற்றிப் பேசப்படுகிறது.அள்ள அள்ள குறையாத அட்சயப் பாத்திரம் அமுதசுரபி, ஒருமுறை உண்டால் பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பசியைப் போக்கும் நாவற்கனி, போன்ற அதீத கற்பனைகள் உருவாக என்ன காரணம்?பசியை ,‘பிணி’ என்றும்,‘பாவி’ என்றும் வன்சொற்களால் வர்ணிக்கிறார் சீத்தலை சாத்தனார். உடலை துன்புறுத்துவதால் ‘பிணி’ என்றும், பெரும் கேடு விளைவிப்பதால் ‘பாவி’ என்றும் சொன்னார் போலும். பசிப்பிணி என்னவெல்லாம் செய்யும் என அவர் பட்டியலிடுவதைப் பாருங்கள்.
PAGES: 14 | VIEWS | DOWNLOADS
எஸ்.சிங்கநெஞ்சம் இயக்குனர்(ஓய்வு) இந்திய புவியியல் ஆய்வுத்துறை சென்னை | மணிமேகலைகாட்டும் இயற்கை பேரிடர்கள் | DOI:
Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
Paper Submission: | Throughout the month | |
Acceptance Notification: | Within 6 days | |
Subject Areas: | Multidisciplinary | |
Publishing Model: | Open Access | |
Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
Certificate Delivery: | Digital |