முனைவர் ஜெ. முத்துச்செல்வன், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி, மீனம்பாக்கம், சென்னை
ஆய்வுச் சாரம்: இவ்வாய்வின் முதன்மை நோக்கம் தமிழ்மொழியின் செவ்வியல் நூல்களில் இடம்பெற்றுள்ள கல்விமுறைகளைத் தொகுத்துப் பழங்காலக் கல்வி முறைகளின் தன்மையையும் சிறப்புகளையும் உலகறியச் செய்வதாகும். இவ்வாய்வு தொகுப்பு முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வாய்வில் ஒப்பீட்டுமுறை மற்றும் விளக்கமுறை அணுகுமுறைகள் கையாளப்பட்டுள்ளன. சமுதாயத்தில் மண்டிக்கிடக்கும் அறியாமை இருளை அகற்றி நல்வழிப்படுத்துதலே கல்வியின் தலையாய நோக்கமாகும். கற்றதன் பயன் மனிதத் தன்மையோடு வாழ்தல் என்பதை “உண்டால் அம்ம இவ்வுலகம்” (புறநானூறு,182) என்று தொடங்கும் புறப்பாட்டு நன்கு எடுத்துக் கூறுகிறது. இத்தகைய கல்வியைத் தமிழர்கள் எவ்வாறு சிறந்த முறையில் பன்னெடுங்காலமாகக் கற்றுவந்தனர் என்பதற்குத் தமிழ் இலக்கிய, இலக்கணங்களே சான்றுகளாக அமைகின்றன. தமிழ்ச் செவ்வியல் நூல்கள் பழங்காலக் கல்விமுறைகளின் கருவூலமாகத் திகழ்கின்றன. அக்கருவூலத்திலிருந்து கல்விச் சிந்தனைகள், கல்வியின் வகைகள் (ஏட்டுக்கல்வி, சமூகக்கல்வி), கல்வி நிலையங்கள் (மன்றம், பள்ளிகள்), கல்விமுறை (ஆசிரியரின் தகுதியும் தன்மையும், ஆசிரியராகாதவரின் தகுதியும் தன்மையும், மாணவரின் தகுதியும் தன்மையும், மாணவராகாதாரின் தகுதியும் தன்மையும்), கல்வி கற்கும் முறை (உற்றுழி உதவுதல், உறுபொருள் கொடுத்தல்), மொழிக்கல்வி (தமிழ்மொழிக்கல்வி, பிறமொழிக்கல்வி), கல்வியின் தன்மை (வெளிநாட்டுக்கல்வி, அனைவருக்கும் கல்வி), கல்வி கற்கும் கால அளவு, கல்வியின் பயன்கள், கல்வியால் பெறும் சிறப்புகள், கல்லாதவர்களின் நிலை போன்றவற்றைத் தொகுத்து தமிழர்களின் பழங்காலக் கல்வி முறைகளைத் தற்காலக் கல்விமுறைகளுடன் ஒப்புமைப்படுத்தி விளக்குவதாக இக்கட்டுரை அமைகிறது.
PAGES: 19 | VIEWS | DOWNLOADS
முனைவர் ஜெ. முத்துச்செல்வன், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி, மீனம்பாக்கம், சென்னை | தமிழ்ச் செவ்வியல் நூல்களில் பழங்காலக் கல்விமுறைகள் | DOI:
Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
Paper Submission: | Throughout the month | |
Acceptance Notification: | Within 6 days | |
Subject Areas: | Multidisciplinary | |
Publishing Model: | Open Access | |
Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
Publication Impact Factor: | . | |
Certificate Delivery: | Digital |