மயிலம் இளமுருகு (வெ. பாலமுருகன்) தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஆரம்பாக்கம், திருவள்ளூர் மாவட்டம்
ஆய்வுச் சுருக்கம்: சங்க இலக்கியங்களுக்கு அடுத்தபடியாகப் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் அமைகின்றன. பொருண்மை அடிப்படையிலும் யாப்பின் அடிப்படையிலும் இவ்வாறு வரையறை செய்யப்பட்டுள்ளது.பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் நீதிநூல்கள் பெரும்பான்மையாக உள்ளன.இவ்விலக்கியத்திற்குள் திருக்குறளுக்கு அடுத்தபடியாக நாலடியார் திகழ்கிறது.திருக்குறள் போன்றே அதிகாரத்திற்கு 10 பாடலைக் கொண்டதாகவும் ஆக 40 அதிகாரங்கள், 400 பாடல்களைக் கொண்டதாக இருக்கின்றது.திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என அமைந்துள்ளது. நாலடியார் வெண்பாக்கள் தோன்றிய காலம் கிபி எட்டாம் நூற்றாண்டு. அதாவது பல்லவ வம்சம் ஆண்ட காலத்தில் வலுவான அதிகார அழுத்தம் தரும் இனமான முத்திரையர் சிறு பிரதேசங்களை ஆண்ட காலத்தில் தோன்றின.நாலடியார் வைப்புமுறை, சமயப்பொறை, வாழ்வியல் நெறிகள், எனப் பலத் தலைப்புகளினூடாகக் கருத்துகள் விளக்கப்பட்டுள்ளன. பொய் பேசாது இருத்தல் குறித்து பல்வேறு நீதிநூல்கள் எடுத்துரைத்துள்ளன. இதனை பொய்யாமை என்றும் நாம் அறிவோம். அந்த அடிப்படையில் நாலடியாரில் உள்ள செய்திகள் சொல்லப்பட்டுள்ளன. சினம் தவிர்த்தல், முயற்சியுடைமை, பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யாமை, நிலையாமை, கல்வி, பிறன்மனை விரும்பாமை, இவ்வாறாக கருத்துகள் சான்று பாடல்களின் அடிப்படையில் இக்கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளன.
PAGES: 18 | VIEWS | DOWNLOADS
மயிலம் இளமுருகு (வெ. பாலமுருகன்) தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஆரம்பாக்கம், திருவள்ளூர் மாவட்டம் | தமிழ் இலக்கியங்கள் நவின்ற அறக்கருத்துகள் | DOI:
Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
Paper Submission: | Throughout the month | |
Acceptance Notification: | Within 6 days | |
Subject Areas: | Multidisciplinary | |
Publishing Model: | Open Access | |
Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
Publication Impact Factor: | . | |
Certificate Delivery: | Digital |