முனைவர் சா.இன்குலாப்,உதவிப் பேராசிரியர்,தமிழ்த்துறை, காயிதே மில்லத் ஆடவர் கல்லூரி, மேடவாக்கம் ,சென்னை | Dr S.Inqulab, Assistant professor, Department of Tamil, The Quaide Milleth College for Men, Medavakkam, Chennai
சூஃபி மெய்ஞ்ஞானிகள் என்போர் இஸ்லாமிய மார்க்கத்தின் ஆன்மிகப் பாதையைக் கட்டமைத்தவர்களாவர். அவர்களின் அயராத பரப்புரைகளின் மூலமாக இஸ்லாத்தை உலகின் பல பாகங்களுக்கும் கொண்டு சேர்த்தனர். சூஃபிகளின் மெய்ஞ்ஞானத் தத்துவங்கள் உலக அரங்கில் இஸ்லாத்தின் மீது புதிய வீச்சை ஏற்படுத்தின. மக்காவில் தோன்றிய சூஃபித்துவம் அங்கிருந்து ஈரான், ஈராக், துருக்கி, சிரியா, பிரான்ஸ், ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட தெற்காசியாவில் பல நாடுகளிலும் பரவியுள்ளது. சூஃபி தத்துவத்தின் காரணமாகப் பல்வேறான ஆன்மிகப் பாதைகளும், வழிபாட்டுச் சடங்கு முறைகளும், இலக்கிய வடிவங்களும் உருவாயின. சூஃபி மெய்ஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டுள்ள தத்துவங்கள் உலக அளவில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதைக் காணமுடிகிறது. சூஃபித்துவ ஆன்மிகப் பாதைகள் தரீக்கா என்ற அமைப்புகளால் ஒழுங்குப்படுத்தப்பட்டு மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கின்றன. ஒவ்வொரு தரீக்காவும் அவற்றை உருவாக்கிய சூஃபி ஞானிகளின் பெயரால் அழைக்கப்படுகின்றன. அவற்றில் முராத்-முரீத் அதாவது குரு-சீடன் என்ற முறையில் ஆன்மிகப் பயிற்சி அளிக்கப்படுகின்றது. அப்பயிற்சிகளாவன: 'திக்ரு' எனப்படும் இறைத்துதி, 'ஃபிக்ரு' எனப்படும் ஆழ்ந்த சிந்தனை, 'முரஹபா' என்றழைக்கப்படும் இறைத்தியானம் மற்றும் 'ஸமா' என்ற சுழல் நடனம் முதலியனவாம். இச்சுழல் நடனம் சூஃபிகளின் ஆன்மிகத் தேடலில் முக்கியமான ஒன்றாக விளங்குகிறது. குறிப்பாகச் சிஷ்டி மற்றும் மௌலவ்வியா தரீக்காக்கள் அதைப் பின்பற்றுவதையும் அறியமுடிகிறது. இஸ்லாமிய சமயத்தில் தனித்துவம் மிக்கவர்களாக விளங்குகின்ற சூஃபி மெய்ஞ்ஞானிகளின் ஞானப்பாதைகள் குறித்தும், வழிபாட்டுச் சடங்கு முறைகள் குறித்தும் விளக்குவதை நோக்கமாகக் கொண்டு இக்கட்டுரை அமைகிறது.
Sufi mystics are the founders of the spiritual path of Islam. Through their tireless propaganda they brought Islam to many parts of the world. The Sufi philosophy gave a new impetus to Islam on the world stage. Sufism originated in Mecca and spread from there to many countries in South Asia including Iran, Iraq, Turkey, Syria, France, Africa and India and Pakistan. Sufism gave rise to many different spiritual paths, liturgical practices, and literary forms. It can be seen that the philosophies developed by the Sufi mystics have had a great impact on the world. Sufi spiritual paths are organized by organizations called tariqa and train students. Each tariqa is named after the Sufi sages who created them. In them spiritual training is given in the form of Murad-Mureed i.e. Guru-Disciple. These exercises are: chanting called 'Dhikru', deep meditation called 'Fikru', meditation called 'Murahaba' and spinning dance called 'Sama' etc. This dance is an important part of the Sufi's spiritual quest. The Chishti and Maulaviya Tarikas in particular are also known to follow it. This article aims to explain about the paths of wisdom of the Sufi mystics who are unique in Islam and about the worship rituals.
PAGES: 22 | VIEWS | DOWNLOADS
முனைவர் சா.இன்குலாப்,உதவிப் பேராசிரியர்,தமிழ்த்துறை, காயிதே மில்லத் ஆடவர் கல்லூரி, மேடவாக்கம் ,சென்னை | Dr S.Inqulab, Assistant professor, Department of Tamil, The Quaide Milleth College for Men, Medavakkam, Chennai | இஸ்லாமிய சூஃபித்துவமும் சடங்கு முறைகளும் | DOI:
Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
Paper Submission: | Throughout the month | |
Acceptance Notification: | Within 6 days | |
Subject Areas: | Multidisciplinary | |
Publishing Model: | Open Access | |
Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
Certificate Delivery: | Digital |