முனைவர் ம. ஷீலா ஸ்ரீநிவாசன், உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, இராசேசுவரி வேதாசலம் அரசுகலைக்கல்லூரி, செங்கல்பட்டு
ஆய்வுச் சுருக்கம்: உயிர்கள் இன்புடைய வாழ்வையே விரும்புகின்றனர். இவ்வின்பமும் என்றும் நிலைத்திருக்க வேண்டுமெனவும் எதிர்பார்க்கின்றனர். அந்த சூழல், உணர்வு உயிர்களின் வாழ்வில் இல்லாததால் ஒரே உண்ர்வு திகட்டும் என்பதெல்லாம் நினைப்பதில்லை. சில நேரங்களில் சோர்வடைந்தாலும், தன் எண்ணம் செயல்களைத் தொடர்ந்து கொண்டே உள்ளதால், இவ்வுடல் பற்றும் மாறாதவனாய் (வாழ, இன்பங்களைத் துய்க்க உடலும் தேவையன்றோ? ) இவ்வுலகவாழ்வும் தான் நினைப்பது போலில்லாமல் இன்பும் துன்பும் தொடர்ந்து வருவதால் இவ்வுலகிற்குப் பின்னாவது நிலையான, நிம்மதியான, இன்பமான வாழ்க்கை வாழ விரும்பி என்ன செய்யலாம் என யோசிக்கலானான். மெய்ஞ்ஞான உலகில் ஆழ்ந்தகன்று செல்லும் புராண இதிகாசங்கள் இதற்கு வழிகாட்டுகின்றன. உடலுடன் சொர்க்கம் விரும்பிய திரிசங்கு முறையற்ற வழியில் முயல, பாண்டவர்களளோ அவர்கள் கால அவதார நாயகனாம் கண்ணனின் வைகுந்தம் செல்வாராய் சென்றனர். அவர்கள் முயற்சியின் வெற்றி, தோல்வி பற்றி வியாசபாரதம் விரிவாய் கூற, நாட்டுப்புற மரபில் ‘ஐவர் அம்மானையும்’ பேசுகின்றது. இவ்வம்மானை கூறும் நிலையான இன்பத்திற்கான வழிகள், செயல்பாடுகள் பற்றி அறிவது பயனுடையதாதலின், இவ்வாய்வு இங்கு செய்யப்படுகின்றது.
PAGES: 13 | VIEWS | DOWNLOADS
முனைவர் ம. ஷீலா ஸ்ரீநிவாசன், உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, இராசேசுவரி வேதாசலம் அரசுகலைக்கல்லூரி, செங்கல்பட்டு | ஐவர் அம்மானையில் சமுதாயம் | DOI:
Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
Paper Submission: | Throughout the month | |
Acceptance Notification: | Within 6 days | |
Subject Areas: | Multidisciplinary | |
Publishing Model: | Open Access | |
Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
Certificate Delivery: | Digital |