வி.விமலாதித்தன் மனிதப் பண்பியல் மற்றும் சமூக விஞ்ஞானக் கற்கைகளுக்கான பட்ட மேற்படிப்பு நிறுவகம், பேராதனைப் பல்கலைக்கழகம், இலங்கை
ஆய்வுச்சுருக்கம்: சித்தர்நெறி நுணுக்கங்களை விளக்குவதும் முதன்மைச் சித்தரான அகத்தியரின் பெயரிலமைந்ததுமான ‘அகத்தியர் ஞானம் முப்பது| இலக்கியத்தில், குரு தத்துவம் குறித்த கருத்துகளை வெளிக்கொணர்வது ஆய்வின் நோக்கமாகும். யோக நெறி நின்று ஞானம் பெற விளையும் மாணவன், செல்ல வேண்டிய பாதையையும் அதன் சிக்கல் நிலைகளையும், சிக்கல்களைக் கடந்து முன்னேறிச் செல்வதற்கு வேண்டிய யோக நுணுக்கங்களையும், அவ்வாறு யோக நெறியில் முன்னேறுகையில் கிட்டும் இடைநிலை அடைவுகளையும் அவற்றின் தன்மைகளையும், இறுதி இலக்கான முழுமையான ஞான நிலையையும் குறித்து சுருக்கமாகக் கூறும் பணியை அகத்தியர் ஞானம் முப்பது புரிகின்றது. பரிபாசைச் சொற்கள் நிறைந்த இந்த இலக்கியத்தினை, அதன் யோகப் பாரம்பரிய விளக்கநூலான ‘அகத்தியர் யோகஞானத் திறவுகோல்| ஊடாக, இந்தக் கற்கை ஆராய்கின்றது. குருவின் தன்மை, மாணவனுக்கு குருவிடமிருந்து கிடைப்பவை, குருவின் திருவடிச் சிறப்பும் குருவழிபாட்டின் அவசியமும், மாணவன் குருவிடம் கற்க வேண்டிய முறை ஆகியவற்றை, விபரண ஆய்வு முறையூடாக இந்த ஆய்வு வெளிப்படுத்தும்.
PAGES: 14 | VIEWS | DOWNLOADS
வி.விமலாதித்தன் மனிதப் பண்பியல் மற்றும் சமூக விஞ்ஞானக் கற்கைகளுக்கான பட்ட மேற்படிப்பு நிறுவகம், பேராதனைப் பல்கலைக்கழகம், இலங்கை | அகத்தியர் ஞானம் முப்பதில், குரு தத்துவம்: அகத்தியர் யோக ஞானத் திறவுகோல் விளக்கநூல் வழியான ஓர் ஆய்வு | DOI:
Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
Paper Submission: | Throughout the month | |
Acceptance Notification: | Within 6 days | |
Subject Areas: | Multidisciplinary | |
Publishing Model: | Open Access | |
Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
Certificate Delivery: | Digital |