Volume 3, Issue 1

தமிழ் இலக்கியங்களில் காணப்படும் இசைப்பகுதிகள்

Author

முனைவர் கே .பி.கனிமொழி உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை அக்சிலியம் கல்லூரி, வேலூர்

Abstract

ஆய்வு   சுருக்கம்: இசை உணர்வின் எழுச்சியால் இசைப்பாடல்கள் தோன்றுகின்றன. இவ்இசையானது மக்கள் தம் நுண்ணறிவு மாட்சியால், பற்பல வகையாகிய இன்னிசைகளைத் தம்மிடற்றிலிருந்தும், கருவிகளிலிருந்தும் எழுப்புகின்றனர். இசையின் இயல்புகளையும், வேறுபாடுகளையும் சிறப்பாக அறியாவிடினும், பொது வகையில் இசையை விரும்பாதவர் யாரும் இல்லை. பச்சிளங் குழவியும் இசையை விழைகின்றது. ஆனினங்கள், இசையைக் கேட்டு அசையிடாதிருக்கின்றன. யானை முதலிய வனவிலங்குகளும், பாம்பு முதலியனவும் இசைக்கு வசமாகின்றன. அறிவே உருவாகிய ஆண்டவனும் இசையை விரும்புகின்றான். அவன் இசை வடிவமாக இருக்கின்றான் என்றும், இசையின் பயனாக உள்ளான் என்றும், இசை பாடுகின்றான் என்றும் ஆன்றோர் கூறுவர். சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும் மற்றும் தொல்காப்பியம், ஐம்பெரும்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்திலும் தமிழிசைப் பற்றிய பல செய்திகள் கூறப்பட்டுள்ளன. எட்டுத்தொகையில் ஒன்றான பரிபாடலில் காணப்படும் பாடல்கள் இசைப்பாடல்களாக அமைவதோடு மட்டுமின்றி, இசைப்பற்றியும், இசைக்கருவிகள் பற்றிய தகவல்களைக் கொண்டனவாகவும் விளங்குகின்றன. தற்போது படித்தவர் முதல் பாமரர் வரை இசை பரவி நிற்கின்றது. இவ்வாறு இலக்கியங்களில் இசைப் பெற்றிருக்கும் இடம் மகத்தானது என்பதை இக்கட்டுரை எடுத்துரைக்கின்றது.

DOI

PAGES: 8 | VIEWS | DOWNLOADS


Download Full Article

முனைவர் கே .பி.கனிமொழி உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை அக்சிலியம் கல்லூரி, வேலூர் | தமிழ் இலக்கியங்களில் காணப்படும் இசைப்பகுதிகள் | DOI:

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Certificate Delivery: Digital

Publish your article with ARAN INTERNATIONAL EJOURNAL OF TAMIL RESEARCH (AIJTR)