Volume 6, Issue 10

இடுதுளை உருவாக்கத்தின் நோக்கம் மற்றும் வளர்ச்சி (The Scope and development of Iduthulai formation)

Author

அ. சகாய ஜெசி கலா, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ் இலக்கியத்துறை சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை

Abstract

ஆய்வுச் சுருக்கம்: புதிய கற்காலத்தில் இறந்தவர்களைப் புதைக்கும் பழக்கத்தினை ஆரம்பித்த தொல் மனிதன் பெருங்கற்காலத்தில் அவர்களை வணங்கும் வழக்கத்தினைக் கொண்டு வந்தான். இறந்த ஆன்மா கல்லில் உறையும் என்ற நம்பிக்கையில் பெரிய கற்களைக் கொண்டு ஈமச்சின்னங்களை உருவாக்கி பல்வேறு நம்பிக்கைகள் மற்றும் சடங்குமுறைகளைத் தோற்றுவித்து வழிபடவும் தொடங்கினான் என்பதை பல மானிடவியல் மற்றும் தொல்லியல் ஆய்வாளர்களின் ஆய்வறிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன. இத்தகைய ஈமச்சின்னங்களான கல்பதுக்கை, கல்திட்டை போன்றவற்றில் இடுதுளை எனப்படும் சிறிய துவாரம் காணப்படுகிறது.  இது ஆரம்பத்தில் இரண்டாம் முறை அடக்கம் செய்யப்பட்ட எஞ்சிய எலும்புகளை துளையின் வழியாக இடுவதற்கும், அடுத்து வழிபாட்டு நிலைக்கு வளர்ச்சி அடைந்த பின்பு படையல் பொருட்கள் இடுவதற்கும், பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதை அகழாய்வு தரவுகள் வெளிப்படுத்துகின்றன. இன்றும் இவ் இடுதுளை இடும் பழக்கம் சில இடங்களில் மறைமுகமாக இருந்து வருகிறது.

DOI

PAGES: 15 | VIEWS | DOWNLOADS


Download Full Article

அ. சகாய ஜெசி கலா, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ் இலக்கியத்துறை சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை | இடுதுளை உருவாக்கத்தின் நோக்கம் மற்றும் வளர்ச்சி (The Scope and development of Iduthulai formation) | DOI:

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Certificate Delivery: Digital

Publish your article with ARAN INTERNATIONAL EJOURNAL OF TAMIL RESEARCH (AIJTR)